Children“மண்ணை உண்ட கண்ணனாம்”
என்று ஆடிப்பாடியே
தம் கலைவாழ்வை முடித்துக்கொண்டனரே
அவர்களுக்காகவாவது
கண்ணா....
தவழ்ந்தேனும் போய்
வன்னி மண்ணில்
மண் உண்டு
வாழ்தல் பற்றி
சொல்லிக் கொடேன்

அப்படியே
உன் மைத்துனன்
சிவனிடம் போய்
இடுகாடுகளில் ஆடிப்பாடி
வாழ்தல் பற்றி
என் மக்களுக்கும்
எடுத்துரைக்கச் சொல்லு

எங்கே யேசு?
உயிர்த்தெழும் கலைபற்றி
வெளியிடாத குறிப்புகளை
என்னதான் செய்தான்
கேள்..

புத்தனிடம்
குருதிக்காட்டிலும்
மரத்தடியில்
குத்துக்கல்லாய் இருப்பது பற்றி
அவன் முகம் கொடுத்தால்
கேட்டு வா

முகமதுவும், அல்லாவும்
மூடிக்கொண்டு போயிருப்பர்
பள்ளி அரங்குகளில்
பர்தா போட்டும் படுத்திருப்பர்

உங்களைப் பொருத்தவரை
கலிகாலம் வரவில்லை
தொந்தரவுக்கு மன்னிக்கவும்
ஆண்டவரே!

கைகட்டிச் சிரிப்போடும்
செல்வச் செழிப்போடும்
பூவும் புஸ்பமுமாய்
குந்தியிருங்கள்
குத்தவைச்சு.

சில்லறைப் பயல்களா... 

கவிதா நோர்வே (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.