பெண் புரட்சி என்பது
ஏதேன் தோட்டத்து வேலி
தகர்த்துக் கிளம்பிய
முதல் பெண்ணிலிருந்தே
தொடங்கலாம்...
ஆண்கள் வேட்டையாடினர்
பெண்கள் சமைத்தனர்
என்ற
இலகு வரலாற்றை
எழுதித்தர
நான் தயாரில்லை
"நேசிப்பது
போராடுவது
பணி செய்வது”
எனும் பெண் வரலாறு
சிதையும் உளியை
கையிலெடுத்திருக்கின்றேன்
என் உளியின் முனை
தட்டும் இடமெல்லாம்
உயிர் பெறட்டும்
மிச்சம் மீதி துகள்களாகட்டும்
சமூகத்தின் சிதைவுகளை
எதிர்க்கத் துணித்ததனால்
நான் அடங்காப்பிடாரி என்றால்
அப்படியே இருக்கட்டும்
நியூட்டனின்
மூன்றாம் விதி
எடுத்துரைத்த எதிர்வினையாய்
நான்
ஏதேன் தோட்டத்தின்
இரண்டாவது பழம்
இப்போது என் கையில்
- கவிதா நோர்வே இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
eve_300பெண் புரட்சி என்பது
ஏதேன் தோட்டத்து வேலி
தகர்த்துக் கிளம்பிய
முதல் பெண்ணிலிருந்தே
தொடங்கலாம்...
ஆண்கள் வேட்டையாடினர்
பெண்கள் சமைத்தனர்
என்ற
இலகு வரலாற்றை
எழுதித்தர
நான் தயாரில்லை
"நேசிப்பது
போராடுவது
பணி செய்வது”
எனும் பெண் வரலாறு
சிதையும் உளியை
கையிலெடுத்திருக்கின்றேன்
என் உளியின் முனை
தட்டும் இடமெல்லாம்
உயிர் பெறட்டும்
மிச்சம் மீதி துகள்களாகட்டும்
சமூகத்தின் சிதைவுகளை
எதிர்க்கத் துணித்ததனால்
நான் அடங்காப்பிடாரி என்றால்
அப்படியே இருக்கட்டும்
நியூட்டனின்
மூன்றாம் விதி
எடுத்துரைத்த எதிர்வினையாய்
நான்
ஏதேன் தோட்டத்தின்
இரண்டாவது பழம்
இப்போது என் கையில்

- கவிதா நோர்வே (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
ஜோ.தமிழ்ச்செல்வன்
ஏதோன் தோட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட பழம்; அனுபவித்த பழம்; உண்ட பழம்; மனித சமூகத்தை பாழ்படுத்தியதாக அறியப்படுகிறது. நீங்கள், ஏதோன் தோட்டத்திலிருந்து எடுத்த பழம், ஏவாள் உண்ட அதே மரத்துப்பழம் என்றால் அதில் புரட்சி இருக்காது. முடிவில் அழிவுதான் இருக்கும். நீங்கள் வைத்திருக்கும் இரண்டாவது பழம் இறைவன் அனுமதித்த மரத்துப் பழம் என்றால் அதில் சமத்துவம் நிலைபெறும். யோசியுங்கள். பழத்தால் சிவபெருமானின் குடும்பம் இரண்டாக உடைந்து போனது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.