Poor girlநடக்கவிருந்த நிகழ்வுகள்
எந்தவித தாமதமின்றியும்
சிறு நெருடலின்றியும்
மெல்லமாய் மௌனமாய்
நடக்காமலே
எரிந்து சாம்பலாகுகிறது
யாரோ ஒருவரின்
நிராகரிப்பினால்.
நடக்கத் தொடங்கும் குழந்தைக்கு
நடை பரிட்சயமாகும்வரை
நடைவண்டி பலவருடங்களாய்
கிடைக்காமலே போகிறது.

முடிவுகள் தெரியாத
பயணங்கள் ஆரம்பமாகிவிடும்
நீண்ட ஒரு பொழுதொன்றில்
நெடுநாள் கடந்து வந்த தூரம்
அளந்துவிடும்படியாய் சற்று
விசாலமற்று கிடக்கின்றது.
சொல்லும் அளவுக்கு
சேமிப்பில் எதுவும்
உள்ளடங்கவில்லை
கனவுகளைத் தவிர.
தினமும் பொழுது
விடிகின்றது, சாய்கின்றது
இதற்கிடையில்
பயணம் கொள்கிறது
ஆசுவாசம் கொள்கிறது
மற்றும் நிறம் கொள்கிறது.
இதுவரை எதையும்
எனக்கென கொண்டுவந்ததில்லை
என்னுடைய பொழுதுகள்.

நானாவது இனி
எதையாவது கொண்டுபோக பார்க்கிறேன்
எனது பொழுதுகளுக்கு. 

இரஞ்சித் பிரேதன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.