Dead bodies
பசியில்
போஜனமின்றி
அலைந்து திரியும்
பிணந்தின்னிகளுக்கு
நெடுநாள் கழித்து
வலிமையிழந்து இறந்துபோன
ஒரு முடவனின் சடலம்
மிகுந்த ஏமாற்றம் தருகிறது.

சதா காலமும் படபடக்கும்
அதன் சிறகின்
ஒவ்வொரு இறகிலும்
வீசிக்கொண்டிருக்கிறது
பிணவாடை

அதன் அலகில்
படிந்திருக்கும் உதிரத்தின்
ஓராயிரம் கறைகளுக்கு
நூறாயிரம் பிணக்கதைகள்
ஒளிந்து கிடக்கிறது.

அழுகிய சதைப்பிணங்களை
கொத்தித்தின்று
வயிற்றின் சுருக்கங்களை
சரிசெய்துகொள்ளவும்,

எலும்புகள் மற்றும் நரம்புகளை
கொண்டு கூடுகள் அமைக்கவும்,

வானுயுற பறந்து வாழவும்
அவைகள் மரபு மாறாதவை.

ஒரு உயிரற்ற பிணத்தை
தின்று கொழுப்பதன் மூலம்
என்ன வீரமிருக்கு,
வறுமைதான் இருக்கு. 

- இரஞ்சித் பிரேதன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.