இந்நாட்களில்
எப்பொழுதும் எதையாவது
எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்
வாகனங்களற்று நீளும்
சாலையின் தனிமையுடன்
கசப்பான நினைவுகள்
நிறைந்ததாக இருக்கின்றது இவ்வாழ்க்கை
அவைகளை
ஒவ்வொறுமுறை கிளரும்போதும்
மீண்டுமொறுமுறை என்னில்
வலிகளை ஏற்படுத்த தவறுவதில்லை
காகிதமாக்கி கசக்கி எறியவோ
முற்றிலும் அழித்துவிடவோ முயலும்
என் முயற்சிகள் அனைத்தும்
தோல்வியையே தழுவுகின்றன
ஒருபோதும்
உன் வெளிச்சங்களால்
நெருங்க முடியாத என் இரவுகளோடு
இன்றும் கூட நிகழலாம்
ஏதேனுமொரு கசப்பான நிகழ்வு
என்னாலும் தடுத்துநிறுத்த இயலாதபடி
- குட்டி செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ரவிக்குமாரின் அடுக்கடுக்கான பொய்கள்: கீழ் வெண்மணி - நடந்தது என்ன?
- இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் ஆர்.எஸ்.எஸ் தடுமாற்றம்
- உடல் உறுப்பு கொடையாளிகளுக்கு அரசு மரியாதை
- சனாதன பூஜ்ஜியம்
- உபியில் சனாதன ஆட்சி இதுதான்
- கேள்வியும் - பதிலும்
- விடுமுறை நாளின் முதல் நாள் இரவுகள்
- ஒரு கோடி பறவை அவள்
- பெரியார் முழக்கம் செப்டம்பர் 28, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- நீட் ஊழலில் புரளும் பாஜக மோ(ச)டி அரசு
- விவரங்கள்
- குட்டி செல்வன்
- பிரிவு: கவிதைகள்