1)

பனிமழை பொழிந்திடும் பொழுதொன்றையொத்த
குளிர்ந்த கானமொன்றை இசைத்தபடி
நீயனுப்பிய செய்தியினைக் காண்கிறேன்
தேவதை விரல்களின் மந்திரக்கோல்
ஆகாயத்திலிருந்து
மயில்நீல வண்ணத்தை மட்டும் காத்திருந்து பெற்று
வெண்பஞ்சு மேகங்களில் எழுதியனுப்பியது போல
என் கைகளில் எடையின்றிக் கனக்கும் அச் சுபசெய்தி
இரவுகளிலும் எனது வாழ்வின் அத்தனை இருள்களிலும்
பல ஒளி மின்னல்களாக ஊடுருவி வெளிச்சம் பாய்ச்சுகையில்
நரம்புகளில் இனிமையாய் அதிர்கிறது

இப்பொழுதெல்லாம்
எனைச் சூழ உள்ள எல்லா மூலைகளிலும்
பூவினை அணைத்தபடி நீயே நிற்கிறாய்
என்றுமே வாடாப் பூவொன்று
வாசனை மிக்க தன் மனதோடு அணைத்தபடி
இக்காதல் பூவினைக் கொண்டாடுவதை
எண்ணி எண்ணித் திளைக்கிறதென் மனது
மலர்க்காடே எப்பொழுதில், எந்தச் செடியில்
பூத்ததிந்த முதல் பூ
காதல் பூ


 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.