Worried manஅதீதத் தனிமையும்
மிகுந்த உற்சாகமும் கலந்த
அந்த சிருஷ்டி உலகத்திலிருந்து
தூக்கியெறியப்பட்டு அநேகநாட்களாகிவிட்டன

கையில் விளக்கோடும்
உள்ளம் நிறைய ஒளியோடும்
அவள் வந்தாள்
என் வானம் வெளிச்சமானது

கனிமரங்களும்
நிறைய காலடித்தடங்களும் கொண்ட
பரபரப்பான பாதைகள்
தினங்களை தின்றுகொண்டிருக்கின்றன

எங்காவது
சற்றே இளைப்பாறுகிற
நிசப்தவினாடிகளில் மட்டும்
பலவீனமாய் கேட்கிறது
என்னைத் தொலைத்துவிட்ட
என் கவிதைகளின் அழுகுரல்

- வீரமணி இளங்கோவன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

More articles by வீரமணி இளங்கோவன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.