Sad Manகாற்றின் சலசலப்பில்
சுவாசம் பெறும் தென்றல்..
என்னின் மயிர்கால்களின்
அசைவுகளில் கூட
உனக்கான வரவேற்பு...!

எத்தனை பொழுதுகள் கழிந்தாலென்ன
உன்னின் மூச்சு காற்றில் எனது மௌனம்
கலையும் பொழுதுகளின்
எதிர்பார்ப்புகள்.. இன்னும்..!

கண்களை மட்டுமே
பார்க்கிறேன்.. அதைவிடவா.
உன்னின் மனதை
சொல்லிவிடப் போகிறது
சப்தம் எழுப்பும்
நாக்கின் மடிப்புகள்..!

வெட்ட வெட்ட வளரும்
நகம் போன்றது
இரவுகளில் ஏமாற்றம்
விசாலப்படும்போது..!
ஒவ்வொரு விடியலிலும்
உனக்கான காத்திருப்பு
ஆர்வமாக்குகிறது.
அந்நியப்படாத உனக்கான
நினைவுகளால்
தரம் பிரித்து
தவிர்க்கவா முடியும்

ஒவ்வொரு விடியலிலும்
காணமல் போகும்
உனக்கான தேடல்கள்
மனதில் தங்கிவிட்ட பூஞ்சைகளாய்
மறுபடியும் உயிர்த்தெழுகிறது
தனிமை கலைத்து
என் பொழுதுகளில்
சுவசக்காற்றாய்
உன் சுவாசம் மலர
வந்து சேர்ந்து
வழி நடத்து
வருகையின் தவப்பொழுதுகளில்
இன்னும் நான்....!


- பொன்னியின் செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.