எப்படி உனக்கு நினைவூட்டுவது?
நீ வரும் வரை,
உயிர் பற்றிச் சிலை போல
நான் நின்றதைச் சொல்லவா?
நீ வந்த பின்பு,
கண்கள் அசையாமல்
தலைகுனிந்ததை நினைவுறுத்தவா?
எப்போதோ போன கப்பல் பயணத்தில்,
இப்போது உன்னையும் சேர்த்துக் கொண்ட போது...
அலை பற்றி வந்து சேர்ந்தாயே, சொல்லவா?
நேற்றைய கனவில் வந்தாயே, சொல்லவா?
இன்றைய மௌனத்தில்
வழி நெடுகத் தென்பட்டாயே, சொல்லவா?
எதிர்காலத்தில் நீ முத்தமிட்டதைச் சொல்லவா?
யாரோ செய்த தவறுக்கு,
நீ என்னைச் கோபித்ததைச் சொல்லவா?
யாரோ போல இப்போது கடந்தாயே,
அதைப் பற்றித்தான் சொல்லவா?
இல்லை...
நம்மிடம் மிச்சப்பட்டிருக்கும்
பிரியங்களைச் சொல்லவா?

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.