நட்சத்திரங்களெல்லாம்
நெல்மணிகளென்று
நாம் தவறாக கணித்த போது
நள்ளிரவில் தங்க வயல்களெல்லாம்
கருமையாக உருகி வழிந்தன

ஒரு தேக்கு இலையை
அரசமரத்து இலையென்று
நாம் தவறாக நினைத்தபோது
அடுத்ததாக பிரவேசிக்க இருந்த
புதிய நதியும்
அதில் மிதக்க இருந்த
நுரைத்த நிலவும் மறைந்து போயின

பிறகு ஒருவருக்கு நதிகள் என்பவை
என்றும் நினைவுகளில்
பாய்ந்து செல்பவை
என்பதைத் தவிர சொல்வதற்கு
ஏதுமில்லையென்று
சமாதானப்படுத்திக் கொண்ட போது
நம் உள்ளங் கைகளிலிருந்து
கவனிக்காத ஈர மணலும்
பொடி மீன்களின் செதில்களும்
உதிர்ந்து கொண்டேயிருந்தன

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.