நீ பரிசனுப்பிய புத்தகத்தில்
பக்கத்துக்குப் பக்கம்
முத்தச்சத்தம் எப்படி
*
வாய் நிறைய சிரிப்பது வாவ்தான்
வாயோரத்தில் சிரிப்பாயே
அது லவ்
*
காது மறைக்கும் கூந்தலில்
கனன்று மிதக்கும் கண்களில்
ஒரு யுகப்படம் நீ
*
இடது கை பழக்கம் இருந்தால் என்ன
உன்னருகே உருதுகவி
ஆகிறேனே நான்
*
புருவத்தை திருத்திக் கொண்டாய்
கர்வத்தை கழுத்தில்
கட்டிக் கொண்டலைகிறாயே
*
திருஷ்டிப் பொட்டுக்கு
பதிலாகத் தானே
முத்தமிட்டு அனுப்புவது
*
ஏன் அப்படி பார்த்தாய்
அப்போதிருந்து தான்
நான் இப்படி பூக்கிறேன்
*
தவறவிட்டதெல்லாம் தவழ
உனைத் தாவிக்கொண்ட பேருந்தில்
தத்தும் தளாங்கு தத்தோம் பாட்டு
*
உன் ஆலயப் பிரவேச நாளில்
ஆலயமணி பட்டாம்பூச்சியாய்
படபடக்கிறேன்
*
குடம் தேர் இழுத்து
போவது போல
நீ நீர் எடுத்துப் போவது
- கவிஜி