கீற்றில் தேட...

ஆற்றைச் சுரண்டி
மணலெடுத்து
மலையைக் குடைந்து
கல்லெடுத்து
விளைநிலம் அழித்து போட்ட
கான்க்ரீட் தரையில்
காற்றால் விழுகிறது
சருகு.
"சே...
குப்பை
சேர்ந்து கொண்டே இருக்கிறது"
என்கிறோம்!!

- அ.சீனிவாசன்