கும்பிட்டு அழகு பார்க்கத்
தொடங்கியபோது தான்
முகம் நோக்கும் சிநேகிதம்
மறைந்து கொண்டது
கை குலுக்குவதில்
தோள் அணைப்பதில்
தொட்டுப் பேசுவதிலிருந்து
விடுபட வைத்த
மதிப்புமிக்க பேராற்றல்
உறவுகளிலிருந்தும்
உதிர்த்துப் போட்டது
உயர் நாற்காலியில்
அமரச் செய்த மரியாதை
படுபயங்கர செயல் போல
அத்தனை கண்களும்
ஊசி முனைகளை வார்த்தெடுத்தன
மெல்ல மெருகேறி
சமூக மனிதனாகிய போது
தூரங்கண்டே ஒதுக்கி விட்டது
நிறுவப்பட்ட அவமானம்
அறிவெனும் அச்சுறுத்தலுக்கு
முதலில் பலியாவது இயல்பு
பிறகு இருத்தல்
பிறகு அறிஞனின் அன்றாடம்

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.