வார்த்தைகள் பொய் எனலாம்
நான் உணர்வுகளை மதிக்கிறேன்
இன்று எனக்குப் புரிகிறது
காதலும், காமமும் வேறு வேறு என்று
ஆனாலும், இரண்டும் இரண்டறக் கலந்தவை
காமம் ஆசையின் ஆரம்பம்
நெருப்பாக சுட்டெரிக்கும்
காதலும் ஆசையின் பிறவியே
ஆனால், உணர்ச்சிகளால் சுடும்
இரண்டுமே பின்னிப் பிணைந்தவை
ஓர் அறிவுள்ள மூளையே
இதைப் பிரித்து உணரும்
காமத்திற்கு பலம் அதிகம்
காதலுக்கும் அழுத்தம் அதிகமே
காமம் முடிவில் எரிக்கும்
காதலும் உயிரை மாய்க்கும்
இரண்டுமே ஓர் உயிரை சாம்பலாகும்
ஆனால்...
காதல் மட்டுமே கண்ணீர் சிந்தும்
காமம் காணாமல் போய்விடும்

- தேவதத்தன்

More articles by தேவதத்தன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.