இருள் ஒளியை
மாற்றி வைக்க
அத்தனை பிடிக்கிறதா
மேசைக்கடியே
சுருண்டு கொண்டே
ஏன் கிடக்கிறாய்
நிறைய குறை கூறுகிறாய்
நின் புன்னகைக்கு
எதிர்ப்பதம் அல்லவா அது
சுய பச்சாதாபத்தில்
எந்த மனம்
சமநிலை அடையும்
விரக்தி கொண்ட
வீடோ கூடோ
மூச்சடைக்காதா
உனை மேவ வரும்
வண்ணப் பூச்சியை
உன் புலம்பல் மொழி
மிரட்டுகிறதே
இறுதி கேள்வி இது
ஏன் உன் வனத்தில்
எப்போதும் செம்மறிகள்
- கவிஜி