கீற்றில் தேட...

மதிய சோற்றுக்கு
எங்கே போவது
தலையெழுத்தைப்
படித்துக் கொண்டிருக்கிறது
தேங்கிய நீரில்
நிஜம் பருகும் நாய்

*
சும்மா சும்மா
பெயர் எழுதிக் கொண்டிருக்காதே
பெயர் சொல்லும்படியான
உன்னை எழுது

*
பெருங்கைகள்
பெற்றுக் கொண்டே இருக்க
வெறுங்கைகள்
வியாக்யானம்
பேசிக் கொண்டே இருக்கின்றன
'விருதெல்லாம் சும்மா'

*
தேவதை வருமென்றால்
தேனிலவுக்குச் சென்றே
தீர்ந்திருக்கும் அற்புத விளக்கு
அதனால்தான் பூதம்

*
ஒப்பாரி வைப்பவருக்கு
விடிந்ததும்
அலுவல் இருக்கிறது
ஒப்புக் கொடுத்தவருக்கு
விடிந்தும்
அழுகை இருக்கிறது

*
பேருந்தை
பறவையாக்கத் தெரிந்த
ஓட்டுநர்
சத்தியமாய்
காதலில் இருக்கிறார்

- கவிஜி