கீற்றில் தேட...

இந்தியப் பெருங்கடலை
சுண்டக்காய்ச்சி விடுகிறது
எல்லை தாண்டி பற்றி எரியும்
பரிசல் கட்டைகள்!

***

தன் ஒவ்வொரு இறகையும்
உதிர்த்து விட்டபடி
வானத்தை உடுத்திக் கொள்கிறது
போதி கண்ட பறவை

***

எப்படியோ வலையிலிருந்து
தப்பி விடுகிறது
சமுத்திரத்தின் எல்லைக்கோடுகள்

***

எங்களை விடுதலை செய்யும்
இலங்கை ராணுவத்திடமிருந்து
கரை ஒதுங்குவது
காயங்கள் கனத்த
உடல் மட்டும்தான்

- ராஜேஷ்வர், சென்னை