கீற்றில் தேட...

ஒற்றையடி மறைத்தாய்
பெருவெளி கொள்கிறேன்
கண் திருப்பி
ஆகாயம் அடைத்தாய்
ஒளி உடைத்து
எனை உருட்டுகிறேன்
இடமறிந்து நகர்கிறாய்
திசையெங்கும் திரிகிறேன்
மனமேற தடை
உணர் கொம்பில் காண் நான்
நேர நுட்பம் தடுக்கிறாய்
கால மாயை
என் வசமிருக்கிறது
மொழி பூட்டிக் கொண்டால்
மௌனம் பேசாதா
வழி மாற்றிக் கொண்டால்
தொலைவுக்குத் தெரியாதா
மறக்கச் சொல்வது
உன் தந்திரச் சொல்
மனம் திறக்கச் செய்யும்
என் மந்திர வாக்கியம்

- கவிஜி