எதன் பொருட்டு
எனைத் தேடுவாய்?
பிடித்த பாடலை
பிடித்த கவிதையை
பிடித்த நிகழ்வை
பிடித்த மனிதர்களை
பற்றிப் பகிர்ந்திடவா?
அனிச்சையாய்
விழி திறவாது
விரலால்
தாயைத் துழாவித்
தேடுகிற மழலை போல்
எதன்பொருட்டு
எனைத் தேடுவாய்?
விசும்பலில்
தலை கோதிட,
விழி வழிநீர்
துடைத்திட
மௌன மொழி
பகிர்ந்திட
எதன் பொருட்டு
எனைத் தேடுவாய்?
- இசைமலர்