தொடர்புடைய படைப்புகள்

கையெழுத்திடாத தீர்ப்பொன்றில்தான்
அவதாரப் பிறப்பிடம்
அங்கதம் கூட்டி
ஆர்ப்பரிக்கிறது
நல்லிணக்கமெனும்
இறையாண்மை கூத்தாக.
வாடகை வாய்கள்
கூட்டணி கூடாரத்திற்குள்
கொடி பிடித்தது
பாசிச பாயாசம் குடித்து.
அடிமைக் கூட்டம்
அச்சாரமிட்டது
சிறுபான்மை சிநேகிதத்தில்
பாதுகாப்பு கொடுப்போமென்ற
பம்மாத்துகளில்
பகலாட்டும் போட்டு
வாக்கறுவடைகள் செய்ய.
வங்கி வரவு செலவிற்கு
வாய்தா கேட்கிறது
வாராக்கடன் முதலாளிகளின் கட்சிக்கு
விசுவாசத்தைக் காட்ட
ஒன்றிய வங்கிதானென்பதை
உறுதி செய்து.
பிருந்தாவன் விடோயர்
வழக்கைப் பேச
நாதியற்றதால்
கங்கைக்குள்
பயணிக்கிறது
கைம்பெண்களின்
பிரேத சிதிலங்கள்
கவனம் பெறாமல்.
யாவற்றுக்குமிடையில்
உண்டு உயிர்த்து
வாழ்கிறது
உழைக்கும் கூட்டம்
ஒரு மாற்றம்
நிகழுமென்று
ஒற்றை நம்பிக்கையோடு
எதிர்நீச்சல் போட்டு
இப்பொழுதும்.

- ரவி அல்லது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.