இடத்துக்குத் தகுந்த இளிப்பு
இசைக்குத் தகுந்த ஜால்றா
தனியாக கருத்து கந்தசாமி
கூட்டத்தில்
கும்பல் கோயிந்த சாமி
மானங்கெட்ட கதவுக்கு
பூட்டெதுக்கு
மூணு காலு முயலுக்கு
வாலெதுக்கு
பறப்பதை நடத்துவதாக
நடப்பதை கிடத்துவதாக
திடீர் சிரிப்பு திலகா
உண்மையில்
காரம் போன மொளகா
காணாது பேசி
கண்டாலோ நேசி
இனி செய்யும் விதியெல்லாம்
இன்னொருவன் செலவில் தான்
முன்ன செஞ்ச விதியும்
முக்காடு போட்ட பதியம் தான்
இதைத்தான் விஜய் சேதுபதி
ஒரு படத்தில் சொல்வார்
நாகரீகம் கருதி
மியூட் செய்கிறோம்
நலங்கெட புழுதியில்
யாரும் விழுந்திடாத
எச்சரிக்கை இது
நன்றி கெட்ட உலகின்
மூத்த சித்திரம் அது

- யுத்தன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.