நதி கானல் ஆகி விட்டது
இருந்தும்
கால் நனைத்துக்
கொண்டிருக்கிறது
கரையொட்டிய கடவுள் சிலை

*
உடைய தெரியாத பலூன்
உருண்டு சுருண்டு
ஒடுங்கி வதங்கி
கடைசியில்
காலுக்கடியே
கவனமற்றுப் போகிறது

*
க்ரீன் டீ ஸ்ட்ராங் டீ
லெமன் டீ லைட் டீ
இஞ்சி டீ மசால் டீ
மனுஷப்பய
கெட்டு சீரழிந்ததெல்லாம்
இப்படியான
வெரைட்டிகளால் தான்

*
அடை காத்தது போதும்
கண் விழி
அலைந்து திரிந்தது போதும்
கண் மூடு

- கவிஜி

Pin It