வீடு அலுவலகம் கோயில் குளம்
கல்யாண வீடு கருமாதி வீடு
இதைத் தாண்டி சினிமா தியேட்டர்
பார்க் பீச் இருந்தால் பீச்
மீறினால் வருடம் ஒரு முறை டூர்
அதுவும் அதே பார்த்த மூஞ்சிகளோடு
சங்கிலி தான் கட்டவில்லை
சாட்சாத் ஒரு கூண்டு நாய் என
அவ்வப்போது கொக்கரிப்பு வேறு
தலை கவிழ்ந்து ஊர்ந்து கொண்டே
வார முழுவதும் நகர்ந்து விட்டு
ஞாயிறன்று தலை தூக்கி ஆட்டம் போடும்
ஒரு கூமுட்டை வடிவம்
இதில் மண்டைக்குள் தானொரு
என ஒளி வட்டம்
பிறக்கும் போதே நான் ஆகப் பிறந்ததாக
நம்பும் அறிவு கெட்ட பிண்டங்கள் தனி ரகம்
இப்போல்லாம் அவுங்கள
வீட்டுக்குள்ளேயே விடறோம்
எங்கம்மா மட்டும் தான்
பழைய ஆளு எனப் பிதற்றும்
பெரிய மனது அறிவிலிகள்
வீதிக்கு வீதி விளக்கு பிடித்துக் கொண்டு
போராட்டம் புரட்சி என்று முகநூலில்
உளறி விட்டு இழுத்து போர்த்தி தூங்கும்
எப்போதும் உணர்ச்சி வயப்படும்
தூய்மைவாதிகள்
காலை மாலை இரவு பின்னிரவு என
முப்போதும் RIP சொல்லத் தயாராக இருக்கும்
கழிவிரக்க கண்றாவிகள்
ரோட்டுல முறுக்கிட்டுத் திரியற
எம தர்ம பைக்கோட்டிகள்
வாழ்த்துனா வாழ்த்து
திட்டுனா திட்டு
ஜை ஜக்கானா ஜை ஜக்கான்
குதிரைக்கு கண்ணைக் கட்டுன மாதிரி
ஒரே ரூட்டு தான்
இதுல காதல் வன்புணர்வு என
அது தனி டிபார்ட்மென்ட்
திருடறவன் கொலை பண்றவன்
கொள்ளை மொள்ளை தனி ட்ராக்
புத்தி மணக்க ஆளாளுக்கு அறிவுரை
நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு
நகைக்கடை வாசல்ல
துணிக்கடை வாசல்ல
பானிபூரி ரோட்டோர வாசல்ல
இதுல பத்துக்குப் பத்து ரூம்ல
மூனடிய சாமி போட்டோக்கு தரும்
பழம் விதி தாராளவாதிகள்
இருக்கற கோஷ்டிகள் பத்தாது என்று
புதிதாக யூ டியூப் கோஷ்டிகள்
குறிப்பாக பிராங் செய்யும்
ஆபத்தான அதிசயப் பிறவிகள்
அப்படியே இன்னொன்று
இந்த எழுதறவன் வரையறவன்
படம் புடிக்கறவன் படம் காட்றவன்
எப்போதும் பாதிக் கண்ணோடு தான் திரிவான்
கூடவே பதுங்கிப் பாயும்
கிறுக்கு பிடித்ததை வெளியே
சொல்லிச் சொல்லி சிரிக்கும்
நாகரீக கோமாளிகள்
புகழுக்கு சாகும் புழு நெண்டும் புடுங்காலிகள்
புத்திஜீவி கூட்டம் வேறு ஒரு பக்கம்
கும்மியடிக்கும்
சுய விமர்சனம் இன்னும் நீளும்
இருங்க... வெட்டி முறிச்சதுக்கு
இந்த வருட சொம்பை சீ விருதை
இந்தா இப்டிக்கா போயி வாங்கிட்டு வந்து
அப்படியே தொடர்கிறேன்

- யுத்தன்

Pin It