அறிவை விரிவாக்க
புத்தகங்கள் தேட
வாசிப்புகள் நீள
கருத்துகள் பரிமாற
வாதங்கள் வந்து முற்ற
காற்றோடு வல்லூறு போல
சதுப்புநில அலையாத்தி போல
அவளோடு பிண்ணிப் பிணைந்து
வந்த வாதங்கள் கானலாக
ஆடைகள் களைந்து உச்சம்தொட
அன்பின் பரிணாம உணர்வுகளை
அவளுள் விதைத்து
அறுவடை செய்ய
காதல் முற்றும் போதெல்லாம்
அவள் பாதம் முத்தமிட
புத்தகங்கள் பல எழுதி
அவள் பெயரோடு என்பெயரும்
கோர்த்து அச்சாய்ப் பதித்திட
இயற்கையை மிரண்டு இரசிக்க
அந்த வைகை மாரிலே
காம்பைத் தேடும் குழந்தைகளாய்
ஆடிவரும் அழகனைக் காண
சேர்ந்தே கையளவு சேமித்து
உலகம் புரிந்திட
ஊர் ஊராய்ச் சுற்ற
உறவுகளுடன் கூடி வாழ
வாழும் வாழ்க்கை முழுதும்
அவளையே காதல் செய்ய
முறிந்த வயதில் முந்தி
அவள்முன் மண்ணில் புதைய
மணமகள் தேவை.

- ஆ.சௌந்தரபாண்டியன், ஓரிவயல்

Pin It