பாம்பெனவே ஊர்ந்துவந்து கொத்துது- இன்று
பாசிஸம்வா யைப்பிளந்து கத்துது
சாம்பலிலே சாமியினைக் காணுது-பகுத்
தறிவுஅதைக் கண்டுதினம் நாணுது

பள்ளிவாசல் தோறும்சென்று தேடுது- அங்கே
பரமசிவன் உள்ளதாகச் சொல்லுது
குள்ளநரி வேஷமெலாம் போடுது-மதத்தைக்
கொண்டுசண்டை மூட்டவழி தேடுது

அசுரரென்றும் தேவரென்றும் கூறுது- புராணம்
அற்பர்களை ஆண்டவராய்க் காட்டுது
பசுவைமட்டும் தெய்வமென்று சொல்லுது- அதைப்
புசிப்பவரைத் தேடிச்சென்று கொல்லுது

முருகனென்று ஒருகடவுள் உண்டுகாண்!- அவனுக்கு
இருதகப்பன் ஒன்பதுதாய் உண்டுதான்
உருகுகிறார் இவனையெண்ணி மக்களும்- உண்மை
உரைப்பவரை உதைக்கின்றார் நித்தமும்

திரட்டிவைத்த அழுக்குருண்டை தானையா!- வினை
தீர்க்கும்வி நாயகனும் கேளையா!
ஒருதகப்பன் அவனுக்கென இல்லையே!- அவன்முன்பு
உக்கியல்லோ போடுதிந்த பூமியே!

குப்பைமேடு போன்றதிந்தப் பொய்மதம் - அதைக்
கோபுரத்தே வைத்ததுச னாதனம்
தப்பெனத்தெ ரிந்துகொண்டோம் இக்கணம் - இதனை
சட்டெனத்தான் வேருடன்நாம் சாய்க்கணும்

- மனோந்திரா

Pin It