கண்ணிவெடி புதைக்கப்பட்ட
சாலையில் பதற்றத்துடன்
மிகுந்த அச்சத்தில்
கடப்பதாகவே
கவனமாக அழைத்துச் செல்கிறார்கள்
குழந்தைகளை
பொம்மைகள் நிறைந்த கடைவீதியில்
மாதக் கடைசி பெற்றோர்கள்.

- சதீஷ் குமரன்

Pin It