குழந்தையைத் தவறவிட்ட
பொம்மை ஒன்று
தெருமுனையில் உட்கார்ந்திருக்கிறது.
தேம்பித் தேம்பி அழும்
அதன் குரலை
செவிமடுக்காத ஊரைக் கண்டு
வீறிட்டுக் கத்துகிறது
கொதிப்படங்காத மாலை வெயில்.

- சதீஷ் குமரன்

Pin It