இறந்து விட்ட அக்காவால்
இனி எழுந்து வரத்தான் முடியாது
எழுத முடியாமல் எல்லாம் இல்லை
காற்றில் அசையும்
இலைகளெல்லாம் என்னவாம்
இலையில் சுருளும்
வெளியெல்லாம் எதுவாம்
இன்னும் உற்று நோக்க
அக்காவின் அச்சு அசல் தான்
அந்தி மாலை வெளிச்சம்
இறந்து விடல்
ஒரு சம்பராதயம் தான்
கேட் சாத்தி விட்டால்
ஆலயத்தில் ஜீஸஸ்
இல்லையென்றா அர்த்தம்....!

- கவிஜி

Pin It