அவனது கண்களின்
நரம்புகளுக்குள்
பறவையின் தீனி போல
உருண்டோடிக் கொண்டிருக்கின்றன
பெண்ணின் மார்பகங்கள்

அதைக் கொத்தித் தின்ன
காமத்தின் எச்சில் வழியும்
அவனுடைய சஞ்சல அலகு
அரிவாளாய் மின்னுகிறது

ஏனோ
அவன் ஞாபகத்தின்
வறண்ட நிலத்தில்
அறுந்து விழுகாமல்
அவன் அம்மாவின்
முலையில் தொங்குகிறது
தூக்கணாங் குருவிக் கூடாய்
அவனது சிசுப்பருவம்!

- செ.நாகநந்தினி

Pin It