பட்டாம் பூச்சி நெற்றியில்
பருவம் சிமிட்டுகிறது
காற்று

*
ஞாயிறை
வெட்டிக் கொண்டிருந்தாள்
வார நாட்களில் கட்டுண்டவள்

*
நுனி நாக்கில் பூக்கச் செய்கிறேன்
விரிந்து மலர்கிறது
மங்கை வனம்

*
சலசலக்கும் ஓடைக்குள்
சத்தியமாய் நீர்க் கால்கள்
சாத்தியம் தான் குமிழ் கொலுசு

*
உச்சி வெயில்
முதியவரை நகர்த்திச் செல்கிறது
மேகக் கூட்டம்

*
இத்தனை அழகாக
பூத்துக் குலுங்கி என்ன பயன்
தோட்டக்காரி விடுமுறையில்

*
மலைச் சரிவில்
காண்
மத்தள சிறகு பறவைக்கு

- கவிஜி

Pin It