தென்னங்கீற்றிடையே தவழ்ந்திடும்
நிலவின் விரல்கள்
மீட்டுகிறது முதல்சாம வீணையின் கீதத்தை
தன் மவுனத்தால்..
பகலெல்லாம் வன்புணர்ந்து
கொதித்து தகித்திடும்
தார்ச்சாலைகள் அயர்ச்சியுடன்
விரிந்து கிடக்கிறது..
சாவு குருவிதான் என்றாலும்
சாகாமல் இரவெல்லாம்
கவ்விபிடித்தபடி
நிலவை சுமக்கும் கூகைகள்
மட்டுமே கொண்டாடுகின்றன
இரவின் ருசியை நிலவில் நனைத்து..
அதிகாலை கண் திறந்ததும்
அப்படியே போட்டுவிட்டு
பகலின் நிழலில்
பதுங்கிக் கொள்கின்றன கூகைகள்.
தலைகீழாய் தொங்கிடும் பழந்தின்னி வௌவாலென
தொங்கியபடி புகைகிறது
நம் அன்றாட பகல்
மூச்சுமுட்ட...

- சதீஷ் குமரன்

Pin It