ரட்டக்கு நக்குன்... ரட்டக்கு நக்குன்
உறுமி, உறுமி வெடிக்க
சலசலத்து காலுக்கேறுகிறது
ஒரு கொலுசொலி...
பொய்க்கால் குதிரையை விட
சூம்பிப்போன கால்களை
ஆதி மனிதனுக்கு நியாபகமில்லை..
கிழிந்த பாவடையினை ஒட்டித் தைத்த மயில்காரனுக்குத்
தெரியும் பசியின் உறுமிச்சத்தம்
கூடுவிட்டு கூடு பாய்ந்து
உசும்பி ஆடிய திருநீர் சாமியின்
தட்டுக்கு குலவை பக்தியோடு
நிரம்புகிறது சில்லரைக் காசுகள்...

- சிபி சரவணன்

Pin It