அரூபத்தை

வரைந்து கொண்டிருந்த
கடவுளின் ஆயிரம் கைகள் 
இதற்கு முன் தீட்டியிருந்த 
தனிமையின் ஓவியத்தில்
அரூபத்தின் சாயல் படிந்திருக்கிறதா
என்றொரு கணம் சிந்தித்தன

அவ்வோவியத்தினுள்
ஓசைப்படாது எட்டிப் பார்த்திருந்த 
அரூபத்தை
சிருஷ்டிகர்த்தாவால்
உணர இயலாத கணத்தில்
மெலிதாய் 
புன்னகைத்தது அரூபம்
அதே ஓவியத்தினுள்

தூரிகை தீட்டும் தன் கைகளை
வேடிக்கை பார்க்கத் துவங்கியது
இறை
தான் தொலைந்து போன
அரூப வெளி குறித்து
அறியாது

- மதன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.