ஊர் கூடி தேரா இழுக்கிறது
கூர்ந்து பார்
நீ நடக்கும் சாலையைத்தான்

*
பழமையான கோயில் என்று
சொல்கிறார்கள்
நீ வந்து போனாய் நவீனமானது

*
உன் முகம் தெரிய அட்ஜஸ்ட் செய்கிறேன்
கண்ணாடியில் கன்னல்மொழி
அதன் பிறகு

*
மின்னூஞ்சல் ஆடும்
மைனாவின் தோள் மீது
பொன்னூஞ்சலாடும் உன் வீதி வெளிச்சம்

*
இரும்பு கடைக்கு உன் பெயர்
இனிப்பு கடை என்று
நீள்கிறது வரிசை

*
உன் உள்ளங்கை கொண்ட நீரில்
தென்னங்கள் கண்டது
ஆறு

*
ஒருமுறை நீ நீரெடுத்து போன பின்
வெகு நேரத்துக்கு
உன் நகலெடுத்துதான் போகிறார் மற்றோர்

*
கோலமிட்டு எழும் வரை
வாய்மூடி அமர்ந்திருக்கும் கொலுசு
அதன் பிறகு தாளமிட்டு நகர்கிறது

- கவிஜி