பிறந்த நாளன்று
போயிருந்த கோயிலில்
வாழ்க வளமுடன் என்ற
வாசகம் ஒட்டப்பட்டிருந்தது
வாயிலில்.
ஆரத்தி வலம் வர
ஆரம்பித்த சமயத்தில்தான்
பார்த்தேன் சுவரில் ஒட்டப்பட்டிருந்த
நோட்டீஸ் ஒன்றின்
கேள்வி பதில்களில்
மிகப் பெரிய போதை தரும்
விஷயம் எது என்னும் கேள்வியையும்
'புகழ்' என்று ஆரம்பித்து அடுத்த வார்த்தை
கிழிக்கப்பட்டிருந்த பதிலையும்.
- செல்வராஜ் ஜெகதீசன் (