நம்மை விட
கண்ணாடிகள்
கவனமாகவே
இருக்கின்றன
நம்மிடம்
தானுடைந்தாலும்
விடுவதில்லை
தன்
பிம்பங்கள் உடைய
தன்னைக் காட்டுவதாய்
தோற்றம் காட்டி
திருப்பிக் காட்டுகின்றன
நம்மையே
முன் நின்று
செய்யப்படும்
சேஷ்டைகளை கூட
சகித்துக் கொள்கின்றன
சலனமின்றி
யார் யாரோ
உடைத்துவிட்டு
“கண்ணாடி உடைவது
அபசகுனம் “
எனும் போது தான்
உடைந்து போகின்றன
உண்மையாகவே
- க.ஆனந்த் (