பேசிப் பிரிந்த
இரவொன்றில்
இவ்வறையெங்கும்
உன் குரல்
வியாபித்திருக்கிறது.
அரூபமாய்
நிறைந்திருக்கும்
அக்குரலை
ஆதூரத்துடன்
சற்றே
வருடிப் பார்க்கிறேன்..
என் விரலிலெல்லாம்
உன் குரலின்
ஸ்பரிசம்...
என் விரலிலெல்லாம்
உன் குரலின்
வாசம்...
என் விரலிலெல்லாம்
உன் குரலின்
அதிர்வு....
உன் குரல்
தொட்ட
என் விரல்களை
என் செய்வேன் நான்..
பிள்ளை தொலைத்த
பைத்தியக்காரி
கந்தல் அணைத்து
திரிவது போல
உன் குரல்
ஏந்தியலைகிறேன்
- இசைமலர்