சிலுவைகள் செய்து கொண்டுதான் இருக்கிறோம்
போதி மரங்கள் நட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்
புறாக்களை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்
இயக்கங்கள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம்
யாரும் இயேசுவாக முயலவில்லை
யாரும் புத்தனாக முயற்சி செய்யவில்லை
அமைதியை அனைவரும் தேடவில்லை
குறைகள் அனைத்தும்
தீர்க்கும் தலைவனாக முடிவதில்லை

ஏழைகளின் இதழில்
புன்சிரிப்பும் இல்லை
எளியவன் நெஞ்சத்தில்
நம்பிக்கையும் இல்லை

எதுவுமே ஆகாமல்
கொஞ்ச காலங்கள் இப்படியே செல்லட்டுமே
ஞான விதைகள்
எதாவது முளைக்கிறதா பார்ப்போம்
துளிர்த்துதெழுவோம் என்கிற பெயரில்
ஏழையின் கண்ணீரும்
நிலமகளின் வலிகளும் தான் திருடப்படுகிறது
புகார் பெட்டியும்
பாவமன்னிப்பும் நிரம்பி வழிகிறது
விதைகளுக்குக் காது செய்து கொண்டிருக்கிறது இயற்கை

- ப.தனஞ்ஜெயன்

Pin It