கண்கொள்ளும் அளவு
நீல நிற வானம்
தேவையைத் தீர்க்கும்
கார்மேகம்
விரல் நூலில் கட்டிமுடிக்கும்
ஒரு முழம் நட்சத்திரங்கள்
காற்றில் எழுதும் இறகு
இறகு எழுதிச் சென்றவரை காற்று
கைப்பிடி அளவு கடல்
நடந்து செல்லும்
தூரம்வரை மணல்
துளிர்த்துக் கொண்டே
இருக்கும் அன்பு
பார்வையின் எல்லை வரை
கைப்பிடி அளவு மலை
பசுந்தரை
சூரிய இரவுகள்
காதலிக்க நிலவு
ஈரம் காயாத இதயம்
அன்பிற்கு ஒரு நாய்
கவிதைக்கு ஒரு பறவை
நடந்து செல்லும் தூரம் வரை
திகட்டாத அன்பு
புத்தனின் கண்கள்
ஆசையற்ற ஆசை போதும்
தீர்ந்து விட்டது இந்த வாழ்வு.

- ப.தனஞ்ஜெயன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.