குளத்தைப் பார்த்து
அமர்ந்திருந்தேன்
அழகான மீனொன்று
துள்ளித் திரிந்தது
எப்பொழுதும் அவ்வளவு
அமைதியாக இருப்பதில்லை
குளம்.

நீரலைகள் மலர்ந்து
கரைதொடும் அழகில்
தடம் பதித்து என் கால்கள்
மீனுக்கு நாரைகள் இல்லையென
புரிய வைக்கும் முயற்சியில்
சட்டென்று மீன்கொத்தியானது
ஒரு பறவை
என்னை ஒரு கண்ணிலும்
குளத்தை மறுகண்ணிலும்
தூக்கிச் சென்றது மீன்.

- ப.தனஞ்ஜெயன்

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.