உன்னையும்
அக்னிப் பிரவேசத்தில்
தள்ளி மகிழ்கிறது
உலகம்.

கிரணங்களில் உன்
அழுக்காடையை நீக்கி
நீராடுகிறது மனங்கள்.

இதனால் என்னவோ
தினமும்
நீர் நிலைகளில்
குளித்தெழுந்து
நரைமுடியால்
துடைத்துக் கொள்ளும்
உன் சிம்மாசனத்தின்
வெள்ளை குதிரைக்கும்
முதுமை வந்தும்
காளையர் மனங்களில்
வலம் வரும்
உன் மார்கண்டேய உருவத்தில்
தோற்றுப் போகிறேன்
நான்.

நிலாமுகியின்
குரல் ஒன்று
தூது சொன்னது.

அமாவசையின்
அர்த்த மண்டபத்தில்
நாட்டியமாடும்
அழகை
ரசிக்கும்
வெண்மேகப் பறவையாய்
தழுவ முயற்சிக்கிறேன்
உன்னை.

- ப.தனஞ்ஜெயன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.