ஒரு பூனையும்
சில பறவைகளும்
பல மலர்களும்
ஓர் ஆடியும்
இல்லத்துடன் சேர்ந்து
சோம்பியபடி காத்திருந்தோம்...

அவள் வந்தவுடன்...
பூனை மெதுவாக வால் உரசி சிலிர்க்கிறது
பறவைகள் மெல்லொலி எழுப்புகின்றன
மலர்கள் வண்ணம் கூடுகின்றன
ஆடி ஒளிர்கிறது
இல்லம் உயிர் கொள்கிறது

பிரவாகமாய்ப் பொங்கத் துடிக்கும்
நிறைகுளத்து நீரை சிறு மதகால்
கட்டுவதென
மனதை உள்ளொடுக்கி,
எதிர்பார்த்து ஏங்கவில்லையென்ற
பாவனை சூடுகிறது
என் ஆறறிவு ஆணவம்

- கா.சிவா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.