செடிகள் கொடிகள்
மரங்கள் இலைகள்
வயல்கள் வரப்புகள்
புழுக்கள் பூச்சிகள்
பாம்புகள் தவளைகள்
பறவைகள் எறும்புகள்
ஊர்வன ஒளிவன
கொஞ்சம் நிழல்கள்
கொஞ்சம் நீர்த்துளிகள்
கொஞ்சம் மனிதர்களும்.....

சரி விடுங்கள்

எல்லாப் பிணங்களையும்
தூக்கிப் போகத்தான்
எட்டு வழிச் சாலை
வரப்போகிறதே...!

- கவிஜி

Pin It