தொடர்புடைய படைப்புகள்

kulfi iceசுவை காண்பதாய் வேண்டி
ஆரம்பித்தது,
அவனோ, தினசரி வாடிக்கையாளராய்
வரும் போதெல்லாம் மணி அசைக்கிறான்
நானும் திறவாது கதவருகே நிற்கிறேன்
போவதாயில்லை, அவனை போக சொல்லவும் மனமில்லை
வெளியே நிற்கும் ஈருருளியை
அகத்தே வைக்க கூட இருமாடி இறங்க
இருபதாயிரம் முறை யோசிப்பவன்
ஆனால் என் கண் முன்னால் வந்து போகும்
குல்பி குச்சியால் விறகு எரிக்கும்
வடக்குகாரனின் வயிற்றுப்பசி;
மணிச்சத்தம் கேட்கிறது
அவனாத்தான் இருக்கனும்
இரண்டு மாடி இறங்குவதெல்லாம் வழக்கமாய் கொள்கிறேன்
பையா பத்து ரூபாவாலவா; இருபது ரூபாவாலாவா
கேட்டதை குடுத்திட்டு
“கல் மிலேங்கே” எனச் சொல்லி என்னை
நாளையும் வாடிக்கையாக்கி
தெருமுனை மறைகிறான்…

- சிவகுரு பிரபாகரன்.மா

Comments

8 comments

8
சுமன் தாஸ்
வாழ்த்துக்கள் சிவகுரு பிரபாகரன் சார்
சேயோன் யாழ்வேந்தன்
வாழ்த்துகள் தம்பி. தொடர்ந்து எழுதுங்கள்
Kaleeswari
Congrats prabhu
Balu
ரசிக்க வைக்கிறாய் ....நீயும் வாழ்க்கையை ரசிக்கிறாய் என்று அழகாக தெறிகிறது...தொடரட்டும் உன் எண்ண ஓட்டங்கள்...வாழ்த்துக்கள்...
Krishnaveni
Congrats siva keep going
Deva
Daily kulpi sapidum pothe ninachen... Intha kavithai varum nu.... Nice nd congrats bro
A.Balu....!
Very nice
Ammu Ammu
Super anna congrats

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.