moon dark cloudஇந்த இரவை 
கம்பளிகளால் போர்த்தியிருக்கிறேன்
கம்பளிக்குள் ஒரு இரவு இருந்தது
அதனை இமைகளால் போர்த்தினேன்
மனது வானத்தை
நினைத்தபடி கிடந்தது 
வெளிறிய மேகங்கள் உலவின
நிலவிலிருந்து ஒளி வீசிக் கொண்டிருந்தது
கருத்த மேகங்கள் கம்பளியைப் போல்
நிலவினை மூடியதும்
ஆகாயமே இருண்டுக் கிடந்தது
நான் 
நிலவுக்குள் இருக்கிறேன்.

- ப.செல்வகுமார், பெரம்பலூர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.