நிகழ்ந்தது கொலை
நீங்களும் படுகொலை என்றீர்கள்

நடந்தது இரயிலடி
நீங்கள் தான் அமைதிப் பூங்கா என்றீர்கள்

இறந்தது பெண்
நீங்கள் பிராமணர் என்கிறீர்கள்

கொன்றவன் குற்றவாளி
நீங்கள் இஸ்லாமியன் என்கிறீர்கள்

துக்கம் கேட்டோம்
நீங்கள் பொறுக்கி என்கிறீர்கள்

உயிர் என்றோம்
சாதி என்கிறீர்கள்

எங்களது வார்த்தையும்
உங்களது வாழ்க்கையும் வேறாயிருக்கிறது

சரி கிளம்புவோமென்றால்
நாமெல்லாம் இந்து என்கிறீர்கள்.

( 24.7.16 அன்று சென்னை சுவாதி படுகொலைக்கும் பிந்திய நிகழ்வினையும் முன்னிறுத்தி )

- ப.செல்வகுமார்

Comments

1 comment

1
N Nagarajan
அருமை !!!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.