bommalattamகாய்ந்த புற்களுக்கிடையே 
ஓடிக் கொண்டிருக்கும் 
சிறு நதி 
காட்டிக் கொண்டிருக்கிறது 
எனக்கான 
சின்னதொரு பாதையை .. 

தோளில் சுமந்திருந்த 
சிறு பையோடு மோதி 
எதிரொலித்துக் கொண்டிருக்கிறது
என் முன் 
சிறகடித்துக் கொண்டிருக்கும் 
குருவிகளின் இறைச்சல் .. 

அந்த மரத்தினடியில் 
முன்பு கட்டப்பட்ட 
ஊஞ்சல் இன்னும் 
அசைந்து கொண்டுதானிருக்கிறது.. 

அதனருகே 
தன் கூண்டினை 
அலகோடு சேர்த்துச் 
சுமந்தபடியே 
பறந்து கொண்டிருக்கிறது 
சின்னஞ்சிறு கிளியொன்று..

முகம் புதைத்து வைத்திருந்த 
விரல்களின் இடைவெளியில் 
இன்னும் மீதமிருக்கின்றன
நேற்றைய 
கண்ணீர்த் துளிகளின் ஈரம்..

இன்னும் சில நொடிகளோடு 
முடிந்து விடக்கூடும் 
என் பயணம்.. 
எனினும் கைகளைக் கட்டியிழுத்து 
ஆட்டுவிக்க 
இன்னும் சில கயிறுகள் 
காத்திருக்கக் கூடும்.. 

- கிருத்திகா தாஸ்

More articles by கிருத்திகா தாஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.