writingமழைத்துளி சிலிர்ப்பில்
பூத்திடும் மரத்திடை
இடிந்து விழுந்த 
குடிசைச் சுவரில் 
பந்தடித்தாள் 
அப்பரட்டைச் சிறுமி்

திரும்பிய பந்தை
திருப்பி அடித்தாள்
அடுக்ககச் சுவரில்
வெடுக்கென விழுந்த அது
தரை தொட்டு ஓடியது
பிடிபடாமல் ...
இங்கும் அங்கும்
அடித்தப்பந்தை
பிடிக்க இயலாது
பின்தொடர்ந்தாள்,
பந்து எரியும் மந்திரமறியா
சிறுமியைப் போல
எழுதத்துவங்கினேன் 
கவிதையை 
வந்து விழாத வார்தைகளால்.

திரும்ப அடித்தப் பந்தை
குதித்துப்பிடித்த
அச்சிறுமி,
தடுக்கிவிழுந்தாள்
உயிர் தெறிக்க .

அச்சிறுமியின் மரணத்தை 
எதிர்கொண்ட கண்களில் ஆர்ப்பரித்தக் கண்ணீராய்
பதுங்கிக் கிடந்த சொற்கள்
வெடித்துவந்தன
கவிதையாய்...

- முனைவர் அரங்க.மல்லிகா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.