தொடுவானம் பற்றி
என்றாவது கேட்டிருக்கிறேனா
உங்களிடம்...

காலம் பற்றிய தியரிக்கு
உங்கள் விளக்கம் தேவையே இல்லை
எனக்கு...

பூக்கள் அவிழும் நொடியை
உங்கள் வீட்டுக்குள் வைக்க
எப்போதாவது
சொல்லியிருப்பேனா....

ஜென்னும் மரபும்
புதுமையும் நவீனமும் உங்களுக்கு
தெரியுமா...

காடுகளின் தனிமைக்குள்
ஒருநாள்
இருங்கள் என்று ஒருபோதும்
உங்களை..வற்புறுத்தியதில்லையே....

பாஷோ.... ஓஷோ...மற்றும்
அலன் போ
படிக்க சொல்லிருக்கவே மாட்டேன்
உங்களை....

கடவுளுக்கும் சாத்தானுக்கும் உள்ள
இடைவெளியை நிரப்பும் என்னை
எப்போதாவது
விவரித்திருக்கிறேனா...

சொல்லுங்கள்...

நீங்கள் மட்டும் எதற்கு
எப்போது பார்த்தாலும்
'விஜி என்ன பண்ற' ன்னு கேட்கிறீர்கள்...?

- கவிஜி

Comments

1 comment

1
முத்துக்குட்டி
அருமை!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.