நீ உதிர்த்துப் போன Take care... 
சில நாட்களுக்கு
பின் போகச் சொல்கிறது என்னை

உன் பெருவிரல் தொட்டுதிரும்
தகவலுக்கு காத்திருந்த எனது நொடிகள்
மூன்று புள்ளிகள் வைத்து
அப்போது போல இப்போதும்
தவமிருக்கிறது

நீ அனுப்பிய "ஹ ஹ ஹ.." விற்கு
ஆகாச வாய் திறந்த என் ஸ்மைலிகள்
சிறு கோட்டால் உதடமைத்துள்ளது

உன் மெளனக் குறீயீடுகளில் ஒன்றை
தவறிய அழைப்பாகவாது கொடு

முன்பைப் போல உன் குரல் தகவலால்
நான் திரும்பக் கிடைக்குமாறு செய்

விரலசைவு பதில்களால்
என் வீணாகும் பொழுதினை
எப்பவும் போல் இல்லாமல் 
கொஞ்சமாவது சேகரி

"இனி இப்படி பன்னா கொன்ன்ன்னுருவேன்...."
என வரும் உன் தகவலுக்கு
"ம்" என தலையாட்டும்
பொம்மையோடிருக்கிறேன்....

மெனக்கிடும் வாய்ப்புகளுக்கு
நினைவின் மரம்
எப்போதும் அவிழ்க்கிறது ஏதோ ஒன்றை

சிலவற்றை நான்
பூக்களாகக் கோர்த்திருக்கிறேன்
உன் சிறு வாய்ப்புகள் அவிழுமென...

- முருகன்.சுந்தரபாண்டியன்

Comments

1 comment

1
munu.sivasankaran
''மெனக்கிடும் வாய்ப்புகளுக்கு
நினைவின் மரம்
எப்போதும் அவிழ்க்கிறது ஏதோ ஒன்றை'' aamaamllaa....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.